சிங்போஸ்ட்டின் அமெரிக்க துணை நிறுவனங்கள் சொத்துகளை விற்றன

அமெரிக்காவில் உள்ள தனது மின் வர்த்தக துணை நிறுவனங்களான ‘ஜெகட் பீக்’, ‘டிரெட்குளோபல்’ ஆகியவை நொடித்துப் போன நிலைக்கு எதிரான பாதுகாப்புக்காக நீதிமன்றத்தில் விண்ணப் பித்திருந்தாலும் தனது சொத்துகளில் பெரும்பாலானவற்றை விற்றுவிட்டன என்று சிங்போஸ்ட் நிறுவனம் நேற்று தெரிவித்தது.

‘ஜெகட் பீக்’, ‘டிரெட்குளோபல்’ நிறுவனங்களின் பெரும் பாலான பங்குகளை $249 மில்லியனுக்கு சிங்போஸ்ட் கடந்த 2015ஆம் ஆண்டில் வாங்கியது. ஆனால் வட அமெரிக்க மின் வர்த்தகச் சந்தை மெதுவடைந்த காரணத்தால், அமெரிக்க பங்குகள் மில்லியன் கணக்கில் இழப்பைச் சந்தித்தன. அந்த வர்த்தகத்தை வாங்கும் நிறுவனங்களைத் தேடும் செயல் ஆறு மாதங்களுக்குப் பிறகும் தோல்வி அடைந்தது.

கணினி மென்பொருள், சேவை நிறுவனங்கள் தங்கள் வர்த்தகங்களில் லாபத்தைக் காண ‘ஜெகட் பீக்’ நிறுவனம் ஆலோசனை வழங்குகிறது. ‘டிரெட்குளோபல்’ நிறுவனம், மற்ற நிறுவனங்களுக்கு இணையத்தள மேம்பாடு, தளவாடங்கள், மின்னிலக்க விற்பனை, படைப்பாற்றல் சேவைகள் ஆகியவற்றுடன் ஆடை அலங்காரம், அழகு, வாழ்க்கைப்பாணி துறைகளில் முறையாக நிர்வகித்தல் சேவையையும் வழங்குகிறது.

தனது துணை நிறுவனங்கள் சந்தித்துள்ள நிலவரத்தால் தனக்கு எவ்வித நிதி பாதிப்பும் இருக்காது என்றும் சிங்போஸ்ட் உறுதியளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!