எந்த உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது என்ற முடிவு 20ஆம் தேதி தெரியும்

எந்த உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது என்ற முடிவு 20ஆம் தேதி தெரியும்

1 mins read
Google News Preferred Icon

அடுத்த ஆண்டு உயர்நிலை ஒன்றுக்குச் செல்லும் மாணவர் கள் எந்தப் பள்ளிக்குச் செல்ல தேர்வு பெற்றிருக்கிறார்கள் எனும் முடிவு இம்மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித் தது. மேலும் மாணவர்கள் கீழ்க்காணும் வழிகளிலும் முடிவு களைத் தெரிந்துகொள்ளலாம்.

- பள்ளித் தேர்வு பற்றி பெற்றோர்கள் தெரிவித்தபோது, தொடர்பு எண் கொடுத்திருந்தால் அதன் மூலம் அவர் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

- பள்ளித் தேர்வு இணையத்தளத்தில் உள்ள உயர்நிலை ஒன்று இணையமுறை.

- தங்கள் தொடக்கப் பள்ளிகள்

எந்தப் பள்ளிக்குத் தாங்கள் தேர்வு பெற்றிருக்கிறார்களோ அந்தப் பள்ளிக்கு இம்மாதம் 23ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மாணவர்கள் சென்றுவிட வேண்டும். இதன் தொடர்பிலான மேல் விவரங்களுக்கு பெற்றோர்களும் மாண வர்களும் கல்வி அமைச்சின் www.moe.gov.sg/s1-posting எனும் இணையத்தளத்தை நாடலாம்.