அரசாங்கம் மூன்றாவது முறையாக பொய்ச்செய்திக்கு எதிராக சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
எதிர்க்கட்சியான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தனது இரு ஃபேஸ்புக் பதிவுகளிலும் தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருந்த கட்டுரையிலும் மனிதவள விவகாரங்கள் தொடர்பில் பொய்த் தகவல்களைச் சேர்த்திருந்தது என்ற காரணத்தால்தான் அரசாங் கம் இவ்வாறு செய்துள்ளது.
அந்தப் பதிவுகளிலும் கட்டுரை யிலும் உள்ளூர் நிபுணர்கள், மேலா ளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட் பர்கள் (பிஎம்இடி) ஆகியோர் அதிக அளவில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தவறான தகவல் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தி உள் ளது.
இணையவழிச் பொய்ச்செய்திக் கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதி ரான பாதுகாப்புச் சட்டத்தின் (பொஃப்மா) கீழ் சிங்கப்பூர் ஜன நாயகக் கட்சி தனது பதிவுகளி லும் கட்டுரையிலும் திருத்தக் குறிப்பை இட வேண்டும் என்று மனிதவள அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.
‘SDP Population Policy: Hire S’poreans First, Retrench S’poreans last’ அதாவது ‘சிங்கப்பூர் ஜனநா யகக் கட்சி மக்கள் தொகை கொள்கை: சிங்கப்பூரர்களுக்கு முதலில் வேலை கொடுங்கள், சிங்கப்பூரர்களை கடைசியாக வேலையிலிருந்து நீக்குங்கள்’ என் பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு.
“மனிதவள அமைச்சின் விரி வான தொழிலாளர் அணி ஆய் வின்படி, 2015ஆம் ஆண்டு முதல் உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டு உள்ள வேலைகளின் விகிதம் அதிகரித்துள்ளது,” என்று மனித வள அமைச்சு நேற்று தெரிவித்தது.சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி தனது ஃபேஸ்புக் பதிவை சமூக ஊடகங்களில் ஒரு விளம்பரமாகப் பதிவிட கட்டணம் செலுத்தியுள் ளது என்றும் தனது பதிவு ஒன்றில் ‘பிஎம்இடி’ பிரிவினரின் வேலை வாய்ப்பு குறைந்திருப்பதாகக் காட்டும் தவறான வரைபடத்தை
யும் அக்கட்சி பயன்படுத்தியுள்ளது என்றும் அமைச்சு விளக்கியது.
உண்மையில் பார்க்கப் போனால், 2018ல் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ‘பிஎம்இடி’ பிரிவினரின் விகிதம் 2014ஆம் ஆண்டுக்குப் பின் ஆகக் குறைவு என்பதையும் அமைச்சு சுட்டியது.
திருத்த ஆணையின்படி, சிங்கப் பூர் ஜனநாயகக் கட்சி, தனது நிதியாதரவு பெற்ற ஃபேஸ்புக் பதிவு, தனது ஃபேஸ்புக் பதிவு, கட்சியின் இணையத்தளத்தில் வெளியான கட்டுரை, வரைபடம் ஆகியவற்றில் பொய்யான தகவல் கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட வேண்டும்.
அந்தப் பதிவுகளும் கட்டுரை யும் நீக்கப்படத் தேவையில்லை.
“இன்றைய பொருளியல் சூழ் நிலையில், இது ஒரு முக்கியமான விளக்கமாக இருக்கிறது. வேலை வாய்ப்புகள் குறித்தும் ஆட்குறைப்பு கள் குறித்தும் சிங்கப்பூர்கள் கவலை கொண்டுள்ளனர் என்பதை உணர்கிறோம்.
“இந்தச் சமயத்தில் இதுபோன்ற பொய்யான தகவல்கள் வேலை வாய்ப்புகள் தொடர்பில் மக்களி டையே தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தும்,” என்றும் அமைச்சு விளக்கமளித்தது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி உள்ளூர் ‘பிஎம்இடி’ பிரிவினரி டையே பயத்தையும் கவலையை யும் ஏற்படுத்தும் நோக்கத்துடனே இச்செயலைப் புரிந்துள்ளது என் றும் மனிதவள அமைச்சு குற்றஞ் சாட்டியது.