வகுப்பறைக்கு அப்பால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ‘ஸ்பெக்ட்ரா’ பள்ளி

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஏட்டுக்கல்வியில் நன்றாகச் செய்யாத மாண வர்களுக்கு ஊக்கமூட்டி, வகுப் பறைக்கு அப்பால் வெற்றி பெறச் செய்யும் அரும்பணியைச் சிறப் பாக ஆற்றியுள்ளார் அப்பள்ளி

யின் முதல்வரான 51 வயது திரு அரவிந்தன் கிருஷ்ணன். தங்கள் இயல்பான பணிக்கு அப்பால் மாணவர்களின் மேம்பாட் டில் ஆசிரியர்கள் காட்டும் விடா முயற்சி, படைப்பாற்றல், கடப்பாடு ஆகியவை அவர்களின் வெற் றிக்கு உறுதுணையாக இருக் கிறது என்று திரு அரவிந்தன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் திரு அரவிந்தன் முதல்வர் பணியில் இருப்பது இன்றுதான் கடைசி நாள். நாளை முதல் அவர் கல்வி அமைச்சின் தலைமையகத்தில் உடற்பயிற்சி, விளையாட்டு, வெளிப்புறக் கல்விப் பிரிவுக்குத் தலைமை வகிப்பார்.

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியின் புதிய முதல்வராக நாளை முதல் பொறுப்பேற்றுக்கொள் கிறார் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் தற்போதைய முதல்வர் திரு டான் டெக் ஹோக்.

தொடக்கப் பள்ளியில் கல்வி யில் சிறப்பாகச் செய்யாத மாண வர்கள் பள்ளிக்கு உற்சாகம் இழந்த நிலையில், தாழ்வு மனப் பான்மையுடன் வருவார்கள் என்றும் அவர்களின் வாழ்க்கைப் பாதையில் வெளிச்சத்தைக்

காட்டி அவர்கள் அந்தப் பாதையில் உற்சாகத்துடன் நடைபோட வழிவகுப்பதே தனது முன்னு ரிமையாக இருந்தது என்று திரு அரவிந்தன் நினைவுகூர்ந்தார்.

ஆறு ஆண்டுகளுக்கும் மூன்று பிரிவு மாணவர்கள் வெற்றிகரமாக அப்பள்ளியில் தங் கள் கல்வியை முடித்த வேளை யில், அவர்கள் தங்கள் மேல் நிலைக் கல்வியைத் தொடருவ தற்கும் அப்பள்ளிப் பாடத்துக்கு அப்பால் வெற்றி பெற மற்றொரு பாதையை வகுத்துக் கொடுத்த திலும் ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

1992ஆம் ஆண்டில் திரு அரவிந்தன் கல்வி சேவையில் இணைந்தார். பிடோக் சவுத் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருந்த திரு அரவிந்தன், ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியின் முதல்வ ராக நியமிக்கப்பட்டார்.

“தங்கள் பிள்ளைகளை வாழ்க்கைத் தொழில் கல்விக்கு அனுப்ப பெற்றோர் முதலில் தயங்கினர். ஆனால், தங்கள் பிள்ளைகள் ஸ்பெக்ட்ராவில் இணைந்த பிறகு பெற்றோரின் மனப்போக்கும் மாறி யது,” என்று திரு அரவிந்தன் கூறினார்.

ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளியின் மாணவர்களில் 80 விழுக்காட்டினர் இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டிலும், 60 விழுக் காட்டினரர் 2017ஆம் ஆண்டிலும் தொழில்நுட்பக் கல்விக் கழகத் தில் முன்னரே சேர்ந்துக்கொள் ளும் மாணவர் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!