இருநூற்றாண்டு கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் சமயத் தலைவர்கள்

இருநூற்றாண்டு கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் சமயத் தலைவர்கள்

1 mins read
167b30a3-cf27-4f06-9e8e-0fadada52fae
சிங்கப்பூர் ஒருங்கிணைந்த தேவாலயப் பாடகர் குழுவினர் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய வர்த்தகர்கள் இங்கு வந்த காலத்திலிருந்து நாடு அடைந்த வளர்ச்சியை விளக்கும் கதைப்பாடலை ஆங்கிலம், தமிழ், மலாய், சீன, ஜப்பானிய மொழிகளில் பாடிக் கவர்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவைக் குறிக்கவும் கிறிஸ்மஸ் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தவும் நேற்று முன்தினம் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுடன் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த 800 பேரும் கலந்துகொண்டனர்.

இஸ்லாம், இந்து, பௌத்த சமயத் தலைவர்களுடன் பிரதமர் லீ சியன் லூங்கும் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பிரதமர், "கிறிஸ்மஸ் கொண்டாடப் படுகிறது. இருநூற்றாண்டு நிறைவு அனுசரிக்கப்படுகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நாம் ஏற்றம், இறக் கம், மகிழ்ச்சி, சோகம், பேரிடர், வெற்றி என அனைத்தையும் அனுபவித்து விட்டோம்.

"மொத்தத்தில் பார்த்தால் அதிக மான மகிழ்ச்சியான தருணங்க ளையே நாம் பார்த்திருக்கிறோம். இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத் தில் நாம் ஒன்றுசேர்ந்து ஏற்படுத் திய சாதனைகளையும் நல்ல தருணங்களையும் எண்ணிப் பார்ப்போம்," என்று கூறினார்.

சிங்கப்பூர் ஆங்கலிக்கன் தேவா லயம், சிங்கப்பூர் தேசிய தேவாலயங்கள் மன்றம், சிங்கப்பூர் ஆக்ஸ்ஃபர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் மன்றம் ஆகியவை கூட்டாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

மனிதவள அமைச்சர் ஜோசஃ பின் டியோ, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லில்லி நியோ, பாட்டாளிக் கட்சி யின் தலைமைச் செயலாளர் பிரித் தம் சிங் போன்றோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.