தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவுச் சாலையில் விபத்து; மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

1 mins read
3dc60db6-c321-46ba-96ee-accb8b69a203
சிலேத்தார் விரைவுச் சாலையின் அப்பர் புக்கிட் தீமா வெளியேறு வழிக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். படங்கள்: ஸ்டோம்ப் -
multi-img1 of 2

இரண்டு கார்கள், ஓர் இழுவை வண்டி, ஒரு மோட்டர் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் சிக்கிய 45 வயதான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புக்கிட் திமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தேர் விரைவுச் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இன்று(டிசம்பர் 16) காலை செலிட்டார் விரைவுச் சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் ஒரு நீல நிற கூடாரம் தென்பட்டது. அங்கு ஒரு மோட்டார் சைக்கிளும் விழுந்து கிடந்தது. பலர் அந்த இடத்தில் இருந்ததாக 'ஸ்டோம்ப்' வாசகர் ஒருவர் தெரிவித்தார்.

காலை 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்தின் டுவிட்டர் பக்கத்தில் காலை 8.55 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தின் காரணமாக அச்சாலையின் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. ஒரு தடத்தை மட்டுமே வாகனங்கள் பயன்படுத்தியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்