சமையலறையில் தீ, 75 பேர் வெளியேற்றம்

சமையலறையில் தீ, 75 பேர் வெளியேற்றம்

1 mins read
cb0e3e41-7523-43a6-8392-2e55da84e909
ஒன்பது முதல் 12வது மாடி வரை இருந்த 75 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. படம்: ஸ்டோம்ப் -

உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13ல் அமைந்திருக்கும் புளோக் எண் 104ல் உள்ள குடியிருப்பு ஒன்றின் சமையலறையில் நேற்றிரவு (டிசம்பர் 15) தீப்பற்றியது.

"தீ," என்று யாரோ கத்தியதைக்கேட்டு எட்டிப்பார்த்த ஜுன் ஸி எனும் 'ஸ்டோம்ப்' வாசகர் அனுப்பிய புகைப்படங்களில் வீடு ஒன்றின் அறையில் தீப்பற்றி எரிவதும் அந்த புளோக்குக்கு அருகில் தீயணைப்பு வாகனங்கள் இருப்பதும் தெரிந்தது.

இந்தச் சம்பவம் பற்றி இரவு 8.35 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.

சமயலறையில் ஏற்பட்ட தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து எஸ்சிடிஎஃப் வீரர்கள் அணைத்தனர்.

அந்த புளோக்கில் ஒன்பது முதல் 12வது மாடி வரை இருந்த 75 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்தத் தீச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்