ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஒரு தகவலைத் திருத்தும்படி எதிர்த்தரப்பு அரசியல்வாதியும் வழக்கறிஞருமான திரு லிம் தியே னுக்கு கல்வி அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.
அந்த அரசியல்வாதி பதிவேற்றிய செய்தி, கல்விக்காக சிங்கப்பூர் மாணவர்களுக்குச் செலவிடுவதைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கு அரசாங்கம் அதிகத் தொகையைச் செலவிடுகிறது என்று குறிப்பிடும் வகையில் இருக்கிறது என்று அமைச்சு கூறி உள்ளது.
புள்ளிவிவரங்களைச் சரி பார்க்கும் அரசாங்கத்தின் இணையத் தளமான Factually, அரசியல்வாதி லிம் பதிவேற்றி இருக்கும் இரண்டு அறிக்கைகளைச் சுட்டிக் காட்டியது.
சிங்கப்பூர் மாணவர்களுக்குக் கிடைக்கும் மொத்த தொகை $167 மில்லியன் என்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு $238 மில்லியன் செலவிடப்படுகிறது என்றும் அவ ரின் ஓர் அறிக்கை தெரிவித்தது.
“மக்கள் செயல் கட்சி சிங்கப்பூ ரர்களுக்காக மானியமாகவும் கல்வி உபகாரச் சம்பளமாகவும் $167 மில்லியன் செலவிடுகிறது.
“ஆனால் வெளிநாட்டு மாண வர்களுக்கு $238 மில்லியன்??” என்று அந்த அரசியல்வாதியின் அறிக்கை தெரிவித்து இருந்ததை அரசாங்கத்தின் இணையத்தளம் சுட்டிக்காட்டியது.
மக்கள் குரல் என்ற கட்சியின் தலைவராக இருக்கும் திரு லிம் முக்குச் சரியாக்க உத்தரவுகளைப் பிறப்பிக்கும்படி இணையவழிச் பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்ட (பொஃப்மா) அலுவலகத்தைக் கல்வி அமைச்சர் ஓங் யி காங் கேட்டுக்கொண்டார்.
கல்வி அமைச்சின் வருடாந் திரச் செலவினம் $13 பில்லியன். இதில் ஏறக்குறைய அனைத்தும் சிங்கப்பூர் குடிமக்களுக்குச் செலவிடப்படுகிறது.
எதிர்த்தரப்பு அரசியல்வாதி தமது செய்தியில் குறிப்பிட்டு உள்ள $167 மில்லியன் என்பது சிங்கப்பூர் உயர்கல்வி மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வி உப
காரச் சம்பளம் மட்டுமே ஆகும்.
ஆகையால் அவர் தெரிவித்து இருக்கும் செய்தி, கல்விக்காக சிங்கப்பூர் குடிமக்களுக்குக் கல்வி அமைச்சு செலவிடும் மொத்த செலவினத்தைப் பெரிதும் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறது என்று இணையத் தளமான Factually தெரிவித்து உள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதிக்குப் பிறப்பிக்கப்பட்டு உள்ள உத்தர வின்படி, அவர் தன்னுடைய இரண்டு ஃபேஸ்புக் பதிவுகளுடன் முழுமையான திருத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும்.
இதனிடையே, இது பற்றி கருத்து கேட்டபோது அரசாங்கத்தின் செயல் அபத்தமானது என்றும் சட்ட வாய்ப்புகள் பற்றி, தான் பரிசீலித்து வருவதாகவும் அரசியல்வாதி லிம் தியேன் தெரிவித்தார்.