துவாஸில் உள்ள ஒரு கிடங்கில் மின்னியல் கழிவு மறுசுழற்சி நிறுவனமான ‘விரோகிரீனி’ன் ஊழியர்கள் மின்ஸ்கூட்டர்களைப் பிரித்தெடுக்கும் கடுமையான வேலையைக் கடந்த மூன்று மாதங்களாகச் செய்து வருகின்றனர்.
சுமார் நான்கு அல்லது ஐந்து ஊழியர்கள் 15 நிமிடங்களுக்குள் மின்ஸ்கூட்டரை 20 பாகங்களாகப் பிரித்தெடுக்கின்றனர். அனைத்து அளவுகளிலும் வடிவங்களிலும் உள்ள மின்ஸ்கூட்டர்கள் கிடங்கில் மரத்தட்டுகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்த மூன்று மாதங்களில் மேலும் பல மின்ஸ்கூட்டர்கள் இங்கு கொண்டு வரப்படும்.
தீப் பாதுகாப்பு அம்சம் இல்லாத தங்கள் மின்ஸ்கூட்டர்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு நிலப்போக்குவரத்து ஆணையம் அறிவித்ததிலிருந்து அகற்றல் நிலையங்களுக்கு மின்ஸ்கூட்டர் உரிமை யாளர்கள் தங்கள் சாதனங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
பதிவு செய்யப்பட்ட ஆனால் UL2272 சான்றிதழ் இல்லாத மின் ஸ்கூட்டர்களை இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை கிட்டத் தட்ட 200 அகற்றல் நிலையங் களில் ஒப்படைக்கலாம்.
அவ்வாறு இவ்வாண்டு இறுதிக்குள் ஒப்படைக்கும் உரிமையாளர்களுக்கு $100 ஊக்கத்தொகை கொடுக்கப்படும்.
மின்ஸ்கூட்டர்களை பிரித்தெடுக்கும் பணியை செய்யவும் நிறுவனங்களில் ஒன்றுதான் விரோகிரீன். “பிரித்தெடுக்கும் மின்ஸ்கூட்ட ரின் பகுதிகள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மறுசுழற்சிக்காக அனுப்பப்படும்,” என்றார் விரோ
கிரீன் நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி திரு ஷாருல் அன்வார். கடந்த மாதம் வரை, பதிவுசெய்யப்பட்ட தங்கள் மின்ஸ்கூட்டர்களை ஒப்படைக்க 14,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று ஆணையம் தெரிவித்தது.
கடந்த மாதம் ஜூரோங் வெஸ்ட் டில் வீரோகிரீன் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட அகற்றல் நிலையத்தில் தனது மின்ஸ்கூட்டரை ஒப் படைக்க வந்த 55 வயது திரு உமார் அப்துல்லா, “அரசாங்கம் வழங்கும் $100 இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல.
“இந்த மின்ஸ்கூட்டரை வாங்கு வதற்கு அதிக பணம் செலவானது. இதை எங்கு வீசுவது என்று தெரியவில்லை. இதை வீட்டில் வைத்தி ருக்கவும் எனக்கு விருப்பமில்லை.
“நான் மின்ஸ்கூட்டர் மூலம் சந்தைக்குச் செல்வேன். எனது பேத்தியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். இப்போது அது பயனற்று போய்விட்டது,” என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.
தங்கள் மின்ஸ்கூட்டரை முன் னரே ஒப்படைப்பதற்கான இறுதி நாள் இம்மாதம் 31ஆம் தேதி. அதற்கு அவர்களுக்கு $100 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத மின்ஸ்கூட்டர் உரிமையாளர்கள் தங்கள் சாதனங்களை இலவசமாக நியமிக்கப்பட்ட அகற்றல் நிலையங்களில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மார்ச் மாத இறுதி வரை ஒப்படைக்கலாம்.
ஆனால் அவர்களுக்கு $100 ஊக்கத்தொகை வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.