இரண்டு கார்கள், ஒரு கனரக இழுவை லாரி, ஒரு மோட் டார் சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் சிக்கிய 45 வயதான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புக்கிட் தீமா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலை யில் விபத்து நிகழ்ந்தது.
காலை 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். விபத்து குறித்து நிலப் போக்குவரத்து ஆணையத்தின் டுவிட்டர் பக்கத்தில் காலை 8.55 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தின் காரணமாக அச்சாலையின் இரண்டு தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. ஒரு தடத்தை மட்டுமே வாகனங்கள் பயன்படுத்தியதால் அங்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. போலிஸ் விசாரணை தொடர் கிறது.