வடக்கு-தெற்கு வழிச்சாலைக்கான மொத்த $954.1 மில்லியன் மதிப்புள்ள மூன்று உடன்பாடுகளில் கடைசிக்கட்ட உடன்பாட்டை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கி இருக்கிறது.
வடக்கு-தெற்கு வழிச்சாலையை அமைப்பதற்கான 14 கட்டுமான உடன்பாடுகளும் கொடுக்கப்பட்டுவிட்டன. நேற்று அறிவிக்கப்பட்ட உடன்பாடு $365.9 மில்லியன் மதிப்புள்ளது.
சுங்கை சிலேத்தாருக்கும் ஈசூன் அவென்யூ 5க்கும் இடையில் அமையவிருக்கும் 3.1 கி.மீ. மேம்பாலச்சாலைப் பகுதியை வடிவமைத்துக் கட்டுவதற்காக அந்த உடன்பாடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதை மூன்று நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு பெற்று உள்ளது.
அந்த நிறுவனங்களில் ஒன்றான சைனா ரயில்வே 11 என்ற நிறுவனத்திற்கு அண்மையில் தெங்கா பணிமனையைக் கட்டுவதற்கான உடன்பாடு கிடைத்தது. அதோடு, ஜூரோங் வட்டார வழித்தடத்தில் இரண்டு நிலையங்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டையும் அந்த நிறுவனம் பெற்றுள்ளது.
வடக்கு-தெற்கு வழிச்சாலை இரண்டாவது மற்றும் மூன்றாவது குத்தகைகளின் மதிப்பு மொத்தம் $582.2 மில்லியன். இது ஈசூன் அவென்யூ 5க்கும் அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டுக்கும் இடையில் 4.5 கி.மீ. நீள மேம்பாலச் சாலையை வடிவமைத்துக் கட்டுவதற்கு உரியதாகும்.