உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக நாளை (டிசம்பர் 18) இரவு ஜோகூர் செல்ல விரும்புவோருக்கு பயண நேரம் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பாருவின் பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு சோதனைச் சவாடி, ஜோகூர் பாரு சென்ட்ரல் பேருந்து முனையம் ஆகிய வளாகங்களில் நாளை இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு வரை அவசரகாலப் பாவனை பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் இன்று தெரிவித்தது.
இதை முன்னிட்டு பயண தாமதங்களைத் தவிர்த்துக்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுப் பயணத்தை மேற்கொள்ளுமாறு பயணிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியது.
மலேசியா செல்லத் திட்டமிட்டுள்ளோர் மாற்று வழியாக துவாஸ் சோதனைச் சாவடியைப் பயன்படுத்தலாம் என்று ஆணையம் கூறியது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity