இரண்டு பெண் பயணிகளை மானபங்கம் செய்த முன்னாள் 'கிராப்ஹிட்ச்' ஓட்டுநருக்கு சிறை

இரண்டு பெண் பயணிகளை மானபங்கம் செய்த முன்னாள் 'கிராப்ஹிட்ச்' ஓட்டுநருக்கு சிறை

1 mins read
759a552c-d3d8-46c4-b316-805dc9646a41
மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார். படம்: ஷட்டர்ஸ்டாக் -

பகுதி நேர கிராப்ஹிட்ச் வாகன ஓட்டுநர் ஒருவர் ஒரே நாளில் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்ட இரண்டு பெண் பயணிகளை மானபங்கம் செய்தார்.

இதற்காக அவருக்கு 22 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

டான் கெங் லெங், 39, என்ற அந்த ஆடவர் மானபங்கம் செய்த பெண்கள் 24 மற்றும் 46 வயதுள்ளவர்கள்.

டானின் வாகனத்தின் பின்னிருக்கையில் நிறைய பொருட்கள் இருந்ததால் அந்த இரண்டு பேரும் அவருடைய வாகனத்தின் முன்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்தபோது அவர்களைத் தொடக்கூடாத இடங்களில் தொட்டு டான் மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.

மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளை டான் ஒப்புக்கொண்டார்.

இதர இரண்டு குற்றச் சாட்டுகள் தீர்ப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த இரண்டு பெண்களும் சென்ற ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஒரு மணி நேரத்திற்குள்ளாக மானபங்கம் செய்யப்பட்டதாக விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

குறிப்புச் சொற்கள்