சுடச் சுடச் செய்திகள்

ஓடும் காரிலிருந்து நாயைத் தூக்கி வீசிய ஆடவர்

ஓடும் காரிலிருந்து சன்னல் வழியாக நாயைத் தூக்கி வீசிய ஆடவரிடம் தேசிய பூங்காக் கழகத்தின் விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

பாசிர் ரிஸ் அருகே லோரோங் ஹலுசில் இரவுப் பொழுதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 1800-4761600 என்ற நேரடித் தொலைபேசி எண்ணிலோ அல்லது www.avs.gov.sg/feedback  என்ற இணையப் பக்கத்திலோ தொடர்புகொள்ளுமாறு தேசிய பூங்காக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தகவல் ரகசியமாக வைக்கப்படும்.

சம்பவம் தொடர்பான காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகம் வழியாக பகிரப்பட்டன. 

காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட நாய் அசைவின்றிக் கிடப்பதை அப்படங்கள் காட்டின. 

அதன் தொடர்பான காணொளி ஒன்றின்படி இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்15) அன்று இரவு 7.55 மணி வாக்கில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 

ஓடும் காரிலிருந்து ஏதோ ஒன்று தூக்கி எறியப்படுவது அந்தக் காணொளியில் தெரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸ், பின்னர் அந்த வழக்கை விலங்குநல மருத்துவச் சேவைப் பிரிவிடம் ஒப்படைத்தது.

தேவையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விலங்குநல மருத்துவச் சேவை தெரிவித்தது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon