தம்முடன் படிக்கும் மாணவி குளிப்பதை அவருக்குத் தெரியாமல் படமெடுத்த என்யுஎஸ் மாணவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
இதே போல 26 வயது ஜோவெல் ரசிஸ் இஸ்மாயில் என்யுஎஸ் விடுதியில் பலமுறை மற்ற பெண்கள் குளிப்பதைப் படமெடுத்ததாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் பாவாடைகளுக்குள் அவர் படமெடுத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்கள் எம்ஆர்டி நிலையங்களிலும் நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது.

