நடைபாதையில் சென்ற பாதசாரியைத் தாக்கியவர் கைது

நடைபாதையில் சென்ற பாதசாரியைத் தாக்கியவர் கைது

1 mins read
Google News Preferred Icon

பொது நடைபாதையில் பாதசாரிக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிய நபருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சச்சரவு கைகலப்பான சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற மாதம் 26ஆம் தேதியன்று இயோ சூ காங் சாலையில் அமைந்துள்ள நடைபாதையில் யாருக்கு வழிவிடுவது என்பது குறித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் பாதசாரியின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் குறித்து போலிசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங் மோ கியோ போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை அன்று ஹவ்காங் ஸ்திரிட் 31ல் அடையாளம் கண்டு கைது செய்தனர். சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.