இங்குள்ள நிறுவனங்களில் உள்ள பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வருடாந்திர அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
நிறுவனங்களுக்குப் பெண்கள் இயக்குநராக இருப்பது குறித்து ‘எம்எஸ்சிஐ’ நடத்திய ஆய்வில், உலகின் 2,765 நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் அடங்கியுள்ள 26 சிங்கப்பூர் நிறுவனங்களில் 18.4 விழுக்காட்டினர் பெண் இயக்குநர்கள். சென்ற ஆண்டின் 13.7 விழுக்காட்டைக் காட்டிலும் இது சற்று ஏற்றமாக உள்ளது. இருப்பினும் அனைத்துலக ரீதியில் இயக்குநராக இருக்கும் பெண்கள் சராசரியாக 20 விழுக்காட்டில் உள்ளதை ஒப்பிடும்போது சிங்கப்பூர் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அத்துடன் இங்குள்ள 23.1 விழுக்காட்டு நிறுவனங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் நிர்வாகப் பொறுப்பில் உள்ளதும் கண்டறியப்பட்டது. ஆய்வில் சராசரியான 36.2 விழுக்காட்டைக் காட்டிலும் இது குறைவே. அனைத்துலக அளவில் பெண் இயக்குநர்கள் சென்ற ஆண்டு இருந்த 17.9% இவ்வாண்டு 20% ஆனது.