சாலைப் பயன்பாடு தொடர்பான தகராறு; பாதசாரியை அபாயகரமான முறையில் தாக்கிய பிஎம்டி ஓட்டுநர் கைது

சாலைப் பயன்பாடு தொடர்பான தகராறு; பாதசாரியை அபாயகரமான முறையில் தாக்கிய பிஎம்டி ஓட்டுநர் கைது

1 mins read
5bf63212-54e1-48b4-926b-1bb790376587
இயோ சூ காங் ரோட்டில் மூண்ட சண்டையில் பாதசாரிக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. படம்: ஸ்டோம்ப் -

சாலையைப் பயன்படுத்துவதன் தொடர்பில் மூண்ட சண்டையில் தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் (பிஎம்டி) பயன்படுத்திய 24 வயது ஆடவர் மற்றவரைத் தாக்கினார்.

வேண்டுமென்றே அபாயகரமான பொருளால் தாக்கி காயம் விளைவித்ததாக அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

காயமடைந்தவரிடமிருந்து கடந்த மாதம் 26ஆம் தேதி இது குறித்து புகார் பெற்றதாகக் குறிப்பிட்ட போலிசார், பாதசாரி ஒருவருக்கும் பிஎம்டி ஓட்டிச் சென்ற ஒருவருக்குமிடையே இயோ சூ காங் ரோட்டில் சண்டை மூண்டதாகக் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவத்தில் பாதசாரிக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.

தொடர்ந்து அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட பிஎம்டி ஓட்டுநரின் அடையாளம் கண்டறியப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) அன்று அவர் ஹவ்காங் ஸ்திரீட் 31ல் கைது செய்யப்பட்டார்.

போலிஸ் விசாரணை தொடர்கிறது.

அபாயகரமான முறையில் வேண்டுமென்றே காயம் விளைவிப்போருக்கு ஏழாண்டுகள் வரை சிறத் தண்டனை, பிரம்படிகள், அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity