அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து போக்குவரத்து போலிசார் புதுவகையான மோட்டார்சைக்கிள்களைப் பயன்படுத்துவர். பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்களை போக்குவரத்து போலிசுக்குச் சேர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதி இது.
பழைய யமகா மோட்டார்சைக்கிள்களுக்குப் பதிலாக இந்த பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்கள் வாங்கப்படுகின்றன. போக்குவரத்து போலிசார் தங்கள் பணியைப் பாதுகாப்பான சாதனங்களுடன் சிறப்பாக மேற்கொள்ள இது உதவும் என்று போக்குவரத்து போலிஸ் ஸ்ட்ரெய்ட் டைம்சிடம் கூறியது.
எனினும் பிஎம்டபிள்யூ நிறுவனமும் போக்குவரத்து போலிசும் மோட்டார்சைக்கிளின் மாடலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டன.
மோட்டார்சைக்கிளின் விலையையோ எத்தனை சைக்கிள்கள் வாங்கப்படுகின்றன என்பதையோ போக்குவரத்து போலிஸ் தெரிவிக்கவில்லை. பழைய சைக்கிள்கள் 16 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளன என்பதை மட்டுமே போக்குவரத்து போலிஸ் கூறியது.