தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர்களின் தனிப் பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கக்கூடும் என்று நம்பப் படுகிறது.
இந்தத் தரவுக் கசிவில் சம்பந் தப்பட்டுள்ள ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம், தற்காப்பு அமைச்சுக்கும் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கும் ‘இமார்ட்’ எனும் தளவாடச் சேவை களையும் வேலைக்குத் தேவை யான பொருட்களையும் வழங்கி வருகிறது.
இந்தத் தரவில் ஊழியர்களின் முழுப் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், தொடர்பு எண் கள், மின்னஞ்சல் முகவரிகள் அல் லது வீட்டு முகவரிகள் ஆகியவை அடங்கும்.
ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு தீங்கிழைக்கும் கணினிக் கிருமிகள் அடங்கிய தனிப்பட்ட தகவல்களைக் கோரும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.
அதன் மூலம் ஊழியர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்தன என்று ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறு வனம் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியது.
இதுபோன்ற மற்றொரு சம்ப வத்தில், 120,000 தனிநபர்கள், 98,000 சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் ஆகியோரின் தரவுகள் அடங்கிய ஒரு சுகாதாரப் பராமரிப்புப் பயிற்சி வழங்குநரின் கணினிக் கட்டமைப்பு, ‘ரான்சம் வேர்’ எனும் தீங்கிழைக்கும் கணி னிக் கிருமிகளால் தாக்கப்பட்டு உள்ளது என்பது இம்மாதம் 4ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பயிற்சியின் வழங்குந ரான ‘எச்எம்ஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ்’ நிறு வனம், இச்சம்பவம் தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ள இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றைப் பணியமர்த்தியது.
“இது கணினிக் கட்டமைப்பில் ஒருமுறை நிகழும் இணையத் தாக் குதல் என்றும் இதில் உள்ள தரவு கள் நகல் எடுக்கப்படவில்லை என்றும் மற்ற தளங்களுக்கு அனுப் பப்படவில்லை என்றும் உறுதி செய்தது.
“ஆகவே, தரவுக் கசிவுக்கு மிகக் குறைந்த வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் ‘எஸ்டி லாஜிஸ் டிக்ஸ்’ தனது அறிக்கையில் விளக்கியது.
பாதிக்கப்பட்ட கணினிக் கட்ட மைப்பில் சில மற்றும் எல்லா மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள், விண்ணப்பதாரர்களின் முழுப் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், தொடர்பு எண்கள், மின் னஞ்சல் முகவரிகள் அல்லது வீட்டு முகவரிகள் ஆகியவை அடங்கும்.
‘சிபிஆர்’ எனும் இதய இயக்க மீட்பு சிகிச்சைப் பயிற்சிக்கும் தானி யங்கி வெளிப்புற இதய இயக்கக் கருவி பயிற்சிக்கும் சென்ற 98,000 சிங்கப்பூர் ஆயுதப்படை சேவை யாளர்களும் இந்த இணையக் கசி வால் பாதிக்கப்பட்டனர்.
இரு சேவை வழங்குநர்களும் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
“எங்கள் வசம் உள்ள எல்லா நபர்களின் தனிப்பட்ட தகவல்களை யும் நம்பகத்தன்மையுடன் பாதுகாப் பதில் நாங்கள் பெரும் கடப்பாடு கொண்டுள்ளோம். நடந்த இந்தச் சம்பவத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
“எங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் மிக உயர்ந்த தரத்திலான பாது காப்பு அம்சங்களுடன் பாதுகாப் போம் என்று உறுதி கூறுகிறோம்,” என்றார் ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு லோகநாதன் ராம சாமி.
“இச்சம்பவத்தை நாங்கள் மிகக் கடுமையானதாக எடுத்துக்கொள் கிறோம். நடந்த சம்பவத்துக்கு நாங் கள் மாணவர்களிடமும் சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர்களிடமும் மன் னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தனிப்பட்ட தரவுகளைக் கடுமை யான அம்சங்களுடன் தொடர்ந்து பாதுகாப்போம்,” என்று ‘எச்எம்ஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்சஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு டீ சூ கோங்.
இந்தக் கணினிக் கசிவு தொடர் பான சம்பவங்களின் தாக்கம் குறித்து ஆராய தற்காப்பு அமைச் சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் இரண்டு சேவை வழங்குநர்களு
டன் இணைந்து பணியாற்றுகின் றன. இணையக் கசிவால் பாதிக்கப் பட்ட தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர்களுக்கு நேற்று இது பற்றி தெரிவிக்கப் பட்டது.