பல அரசாங்க அமைப்புகள் ஈடுபட்ட பத்து நாள் அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 268 பேரிடம் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 19 பேர் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கிளமெண்டி போலிஸ் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு. சிறப்பு செயலாக்கத் தளபத்தியம், போலிஸ் உரிமம் மற்றும் ஒழுங்குமுறை பிரிவு, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
“நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொழிலியல், குடியிருப் புப் பகுதிகள், மதுவிற்பனைக் கடைகள், பொதுக் கேளிக் கைக் கூடங்கள் ஆகியவற்றில் திடீர் சோதனைகள் நடத்தப் பட்டன. கள்ளத்தனமான சூதாட்டம், இணைய பாலியல் சேவைகள் தொடர்பான குற்றங்களை மையமாகக் கொண்டு அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று போலிஸ் தனது அறிக்கையில் கூறியது.
பொதுச் சூதாட்டச் சட்டத்தின் கீழ் 52 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்ட பத்து ஆண்கள் கைது செய்யப்பட் டனர். போதையில் வாகனமோட்டியதற்காக 38 வயது ஆட வரும் இணைய பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தே கத்தின் பேரில் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்ட னர். எஞ்சிய ஏழு பேர், சட்டத்துக்கு எதிரான கும்பலில் உறுப்பினர், போதைப்பொருள் ஒழிப்புச் சட்டம், வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டம் ஆகியவை தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஆக இளையவரின் வயது 16. விசார ணைகள் தொடர்கின்றன.