வெவ்வேறு சமூக குழுக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். அது நமது சமூகத்தின் முக்கியமான அம்சம் என்று உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் தெரிவித்துள்ளார்.
“பன்முனைக் கலாசாரம் பல இடங்களில் பின்தங்கிவரும் வேளையில் சிங்கப்பூரில் அது முன்னோக்கி சென்றுகொண்டிருக் கிறது. ஒரு நல்ல உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், மோட்டார் சைக்கிளோட்டி குழுக்கள் ஒன்றுசேர்ந்து, சொந்தமாக நிதி திரட்டி, அதை சமூகத்துக் காக செலவழிக்க முன்வருகின் றன.
“குறிப்பாக, இந்த விழாக்கா லத்தில் அவ்வாறு செய்வதால், குடும்பங்கள் ஆண்டிறுதியை மகிழ்ச்சியுடன் முடிக்கலாம்,” என் றும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு அம்ரின் கூறினார்.
“நாம் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறோம் என்பதும் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதும் முக்கியமல்ல. அந்த வழங்குதலில் எவ் வளவு அன்பு காட்டப்படுகிறது என்பதுதான் முக்கியம்,” என்று திரு அம்ரின் அன்னை திரேசா கூறிய பொன்மொழிகளைச் சுட்டி னார்.
“இந்த வார்த்தைகள் நாம் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும் அன்பை வெளிப்படுத்துவதில் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதைப் புலப்படுத்துகிறது.
“அதைத்தான் இந்த மோட்டார் சைக்கிளோட்டிகளும் தங்கள் செயல்களில் காட்டியுள்ளனர். சாதாரண மக்கள், சாதாரண ஆண்கள், சாதாரண பெண்கள் என அனைவரும் தங்கள் பங்கை வெளிப் படுத்தி வசதி குறைந்தவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த லாம்,” என்றார்.
உட்லண்ட்ஸ் மலாய் நற்பணிச் செயற்குழுவுடன் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்று சேர்ந்து உட் லண்ட்ஸில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு விநியோக நிகழ்ச்சியை நேற்று நடத்தின. அதில் சிறப்பு விருந்தினராக திரு அம்ரின் அமின் கலந்து
கொண்டார்.
23 மோட்டார் சைக்கிள் குழுக் களின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து உணவுப் பைகளை இல்லங்களுக்கு விநியோகம் செய்ய உதவினர்.
இந்நிகழ்ச்சியில் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், குடி யிருப்பாளர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள அவர்க ளுக்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொடர்பான விளக்கவுரையையும் படைத் தது.
முட்டை, அரிசி, சீனி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகளை நேற்று உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் 150 வசதி குறைந்த குடும்பங்கள் பெற்றுக்கொண்டன.