காம்பாஸ் அவென்யூவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத் தில் மரணமடைந்த உணவு விநியோக ஊழியராகப் பணியாற்றிய மோட்டார் சைக்கிளோட்டி, தமது குடும்பத்தைக் காப்பாற்ற இரு வேலைகளைச் செய்து வந்தார்.
அவரது குடும்பத்தில் அவருடன், நோய்வாய்ப்பட்டிருந்ததால் வேலை செய்ய இயலாத நிலையில் உள்ள மனைவியும் 11 வயது மக ளும் உள்ளனர். மலேசியாவில் பேராக் மாநிலத் தலைநகர் ஈப்போவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த சிங்கப்பூர் நிரந்தரவாசி, ஒரு மின்னணுவியல் பொறியியல் நிறுவனத்தில் முழுநேரமாக வேலை செய்துகொண்டிருந்தார்.
தமது மனைவி நோய்வாய்ப் பட்டு வேலை செய்ய முடியாத சூழ்நிலையில் கூடுதல் வருமானம் ஈட்ட கடந்த ஒரு மாதமாக உணவு விநியோகப்பணியில் அவர் ஈடு பட்டார்.
திரு பாங் வெய் சம் எனும் அந்த 42 வயது ஆடவர், பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூ ரில் வேலை செய்து வருகிறார் என்று லியன்ஹ வான் பாவ் சீன நாளிதழ் நேற்று முன்தினம் தெரி வித்தது.
“அவர் ஒரு நல்ல கணவர், நல்ல தந்தை. புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. குடும்பத்தில் அவர் மிகுந்த அக் கறை காட்டுவார்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவரது மனைவி தெரிவித்தார்.
திரு பாங்கின் நல்லுடலை அவ ரது குடும்பத்தினர் நேற்று முன் தினம் காலை சவக்கிடங்கில் இருந்து பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அவரது நல்லுடல் இறுதிச் சடங்குக்காக ஈப்போவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் திரு பாங் ஓட் டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு கனரக லாரியுடன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண் டார்.
விபத்துக்குப் பிறகு வெளியான படத்தில் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்த ஒரு மோட்டார் சைக்கி ளுக்குப் பக்கத்தில் போலிஸ் தனது நீல நிறக் கூடாரத்தைப் போட்டி ருந்ததைப் பார்க்க முடிந்தது (இடது படம்).
கிராப் சின்னம் பொறிக்கப்பட்டி ருந்த உணவு விநியோகப் பை ஒன்றும் மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்டிருந்தது. கூடார மும் மோட்டார் சைக்கிளும் ‘800 சூப்பர்’ எனும் கழிவு நிர்வாக நிறு வனத்தின் பெயர் எழுதப்பட்டிருந்த லாரிக்குப் பின்புறம் இருந்தன.
“திரு பாங்கின் குடும்பத்துக்குத் தேவையான ஆதரவும் உதவியும் வழங்க அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என்று கிராப் ஃபுட் நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, ‘800 சூப்பர்’ நிறு வனத்தின் பேச்சாளர், “இந்த விபத்து குறித்து போலிஸ் விசா ரணை நடந்துகொண்டிருப்பதால் எங்களால் கருத்து எதுவும் கூற இயலாது,” என்று தெரிவித்தார்.