டெக் வை பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
டெக் வை லேன், புளோக் 120ல் நிகழ்ந்த கைகலப்புச் சம்பவம் குறித்து தங்களுக்கு அன்று இரவு 7.42 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று போலிஸ் கூறியது.
அந்தக் கைகலப்பில் 35 வயது ஆடவருக்குக் காயங்கள் ஏற்பட்டதால் அவர் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்டதற்காகவும் குற்ற வியல் மிரட்டல் விடுத்ததற்காகவும் 65 வயது ஆடவரும் கைகலப்பில் ஈடுபட்டதற்காக 30, 35 வயதுடைய ஆடவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள் என்று போலிஸ் தெரி வித்தது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.