வழக்கமான முழுநேர தேசிய சேவை கடமைகளுக்குப் பிறகு ஆறு தேசிய சேவையாளர்கள் ஹெண்டர்சன் வட்டாரத்தில் உள் வாடகை வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு இலவச துணைப் பாட வகுப்புகளை நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ‘படிங் மைண்ட்ஸ்’ எனும் இத்திட்டத்தைத் தொடங்கிய திரு சுவா ஸீ ஹியன் தம்முடன் படித்த முன்னாள் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஐவரை தமது திட்டத்தில் இணைத்துக்கொண்டார்.
“நமது கல்வி முறை சிறந்ததுதான் என்றாலும் சில பிரி வினருக்குக் கூடுதல் உதவிகள் தேவைப்படுகின்றன. இது குறித்து குறைப்பட்டுகொள்வதை விடுத்து நானே களத்தில் இறங்கி இந்தப் பிள்ளைகளுக்கு உதவ முடிவெடுத்தேன்,” என்றார் லாபநோக்கமற்ற அமைப்பின் நிர்வாக இயக்கு நரான 20 வயது திரு சுவா.
“ஹெண்டர்சன் வட்டாரத்தில் உள்ள ‘வி லவ் லெர்னிங் செண்டர்’ எனும் தொண்டூழியரால் நடத்தப்படும் நிலை யத்தை அணுகினேன். அந்நிலையம் வசதி குறைந்த பிள் ளைகளுக்கு வாசித்தல், கலை, துணைப் பாடம் ஆகிய வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்துடன் ஒத்துழைத்து எங்கள் தொண்டூழியப் பணியைத் தொடங்கினோம்,” என்றார் திரு சுவா.
இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ‘படிங் மைண்ட்ஸ்’ தனது முதலாவது துணைப்பாட வகுப்பைத் தனது நிலையத்தில் தொடங்கியது. அதன் மாணவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள வாடகை வீடுகளில் வசிப்பவர்கள்.
சனிக்கிழமைகளில் இரண்டு மணிநேர வகுப்புகள் நடத் தப்படும். தற்போது தொடக்கநிலை ஒன்று முதல் உயர்நிலை 5 வரையிலான 30 மாணவர்கள் இந்த வகுப்புகளில் பயில் கின்றனர்.
இத்திட்டத்தை வசதி குறைந்த பிள்ளைகள் உடைய மற்ற அக்கம்பக்கங்களுக்கும் விரிவுப்படுத்த ‘படிங் மைண்ட்ஸ்’ அமைப்பு திட்டமிட்டுள்ளது.