செல்லப் பிராணி காப்பீடு அதிகரிப்பு

செல்லப் பிராணி காப்பீடு அதிகரிப்பு

1 mins read
d1c72966-146c-4b54-84ab-260c6f1bb283
(படம்: ராய்ட்டர்ஸ்) -

கால்நடை மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவற்றின் பெயரில் காப்பீடு செய்து வருவதாக சேனல் நியூஸ் ஏஷியா தெரிவித்து உள்ளது.

செல்லப் பிராணிகளின் வருடாந்திர மருத்துவ சோதனை நூறு வெள்ளிக்கும் மேல் என்பதில் இருந்து தொடங்கி பெரிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு $20,000 வரை செலவாகிறது.

காப்பீடு செய்வதால் கிடைக்கும் பலன்களை அறிந்த பின்னர் பலரும் முன்வந்து தங்களது செல்லப் பிராணிகளுக்காக காப்பீடு எடுத்து வருவதாக சிங்கப்பூர் பொது காப்பீட்டுச் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஹோ காய் வெங் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தார்.

"சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரிப்பதைப்போலவே அவற்றுக்கான மருத்துவச் செலவும் அதிகரிக்கிறது. குறிப்பாக நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படும் நிலையில் செலவு அதிகமாகிறது," என்றார் அவர்.