$800,000 மோசடி: பெண்ணுக்கு சிறை

$800,000 மோசடி: பெண்ணுக்கு சிறை

1 mins read

பொய்யான பயணச் செலவு அறிக்கைகளைச் சமர்ப்பித்து தமது நிறுவனத்தை கிட்டத்தட்ட $800,000 ஏமாற்றிய குற்றத்திற்காக பெண் ஊழியர் ஒருவருக்கு நேற்று நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தக் குற்றச் சம்ப வம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. டான் நியுக் ஹோங், 45, என்னும் அந்த ஊழியர் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை காற்பந்து சூதாட்டம், சொந்த செலவுகள் ஆகியவற்றுக்காகவும் கடன்களை அடைக்கவும் பயன் படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டது.