வருமானத்தை குறைத்துக் காட்டிய நிறுவன முதலாளிக்கு தண்டனை

வருமானத்தை குறைத்துக் காட்டிய நிறுவன முதலாளிக்கு தண்டனை

1 mins read

வருமானத்தில் $1.28 மில்லியன் குறைத்துக் காட்டிய குற்றத்திற்காக ஆலோசனை சேவை நிறுவன முதலாளி ஒருவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் $741,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. இங் வீ கெங் எனப்படும் அவர் 'எஸ்எம்இ கிராண்ட் அஸிஸ்ட்' என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வருமான வரி ஏய்ப்பை நோக்கமாகக் கொண்டு தமது வருவமான வரிப்படிவத்தில் பொய்த் தகவல்கள் அளித்த இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப் பட்டது. அவர் இவ்வாறு செய்ததன் மூலம் கடந்த 2015, 2016 கணக்கீட்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட $250,000 வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக உள்நாட்டு வருவாய் ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் வரிப்படிவ தாக்கலில் தவறு நிகழ்ந்திருந்தால் அது குறித்த தகவல் களை உடனடியாகத் தெரிவிக்குமாறு நிறுவனங்களையும் தனிப்பட்டவர்களையும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.