அப்பர் தாம்சன் சாலை, ஜாலான் டோடாக் சந்திப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு வேன்கள் மோதிக்கொண்ட விபத்தின் தொடர்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 45 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து அன்று அதிகாலை 5.06 மணிக்குத் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது.
இந்த விபத்தை நேரில் கண்ட 75 வயது முதியவர் ஒருவர், வெள்ளி நிற வேனும் வெள்ளை நிற வேனும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாக ஷின் மின் நாளிதழிடம் கூறினார். அந்த வெள்ளி நிற வேனின் முன்பகுதியும் அந்த பின்புற கண்ணாடியும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.