‘எச்எம்ஐ’ கழகத்தில் புதிய இணையப் பாதுகாப்பு அம்சங்கள் நடப்பில் உள்ளன

தற்காப்பு அமைச்சின் சேவை வழங்குநரின் இணையக் கட்டமைப்பின் மூலம் தற்காப்பு அமைச்சு, சிங்கப்பூர் ஆயுதப்படை ஊழியர்கள் 98,000 பேர் உட்பட 120,000 பேரின் தனிப் பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்ததை அடுத்து, மேலும் கடுமையான இணையப் பாதுகாப்பு அம்சங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து இணையப் போக்குவரத்தையும் இப்போது ‘எச்எம்ஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சையன்சஸ்’ நிறுவனம், கண்கா ணித்து வருகிறது என்று அந்த தனியார் சுகாதாரப் பராமரிப்பு பயிற்சி வழங்குநர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

அந்தக் கழகத்தின் மின்னஞ் சல் கட்டமைப்பு இப்போது மேலும் பாதுகாப்பானதாக்கப்பட்டுள்ளது. அதை புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள தகவல் பாதுகாப்பு மேலா ளர் கண்காணிப்பார்.

ஊழியர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு தீங்கிழைக்கும் கணினிக் கிருமிகள் அடங்கிய தனிப்பட்ட தகவல்களைக் கோரும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன.

அதன் மூலம் ஊழியர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்தன என்று ‘எஸ்டி லாஜிஸ்டிக்ஸ்’ நிறு வனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

இதுபோன்ற மற்றொரு சம்ப வத்தில், தனிநபர்கள், சிங்கப்பூர் ஆயுதப்படை சேவையாளர்கள் ஆகியோரின் தரவுகள் அடங்கிய ஒரு சுகாதாரப் பராமரிப்புப் பயிற்சி வழங்குநரின் கணினிக் கட்டமைப்பு, ‘ரான்சம் வேர்’ எனும் தீங்கிழைக்கும் கணினிக் கிருமி களால் தாக்கப்பட்டு உள்ளது என்பது இம்மாதம் 4ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இணையத் தற்காப்பு அமைப் பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் மார்க் டான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ எங்கள் இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநர் களின் தரங்கள் மறுஆய்வு செய் யப்படும். அப்போதுதான் எங்கள் ஊழியர்களின் தனிப்பட்ட தரவு களும் தகவல்களும் வலுவாகப் பாதுகாக்கப்படும்,” என்றார்.

“ஓர் அமைப்புக்கு இணையப் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் இவ்வகை தாக்கு தலுக்கு ஆளாகலாம். காரணம், அவற்றின் இணையப் பாதுகாப்பு அம்சங்களுக்கு போதிய பலம் இல் லாமல் இருக்கும் வாய்ப்பு ஏற்பட லாம் என்றார் எவர்ஷெட்ஸ் ஹேரி இலாயஸ் சட்ட நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு, அந்தரங்கம், தரவுப் பாதுகாப்புப் பிரிவின் தலை வர் திரு கே.கே. லிம்.

“பொது அமைப்புகளுக்கு சேவை அளிக்கும் நிறுவனங்களும் தங்கள் இணையப் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான், இணைய ஊடுருவிகள் தங்கள் மூலம் தனிப்பட்ட தரவுகளைத் திருட முடியாது என்று கூறினார் பின்சென்ட் மேசன்ஸ் எம்பிள்ளை நிறுவனத்தின் வழக்கறிஞர் திரு பிராயன் டான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!