புத்தாண்டை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் மரினா பே மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வேளையில், சிறப்பு போலிஸ் படைப் பிரிவுகளும் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு, பயங் கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பயிற்சி பெற்ற அவ சரகால பதிலடிக் குழுக்கள், பொது ஒழுங்கைக் கட்டிக்காப்பதில் பயிற்சி பெற்ற சிறப்பு செயலாக்கத் தளபத்தியத்தின் போலிஸ் அதிரடிப் படையினர் போன்றோர் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மத்திய, ஜூரோங் போலிஸ் பிரி வுகள், போக்குவரத்து போலிஸ், பொதுப் போக்குவரத்து பாதுகாப் புத் தளபத்தியம், போலிஸ் கட லோரக் காவற்படை ஆகியவற்றின் சுமார் 700 அதிகாரிகள் அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறும் மரினா பே புத்தாண்டு வரவேற்பு 2020 கொண்டாட்ட நிகழ்வில் பாது காப்புப் பணியாற்றுவார்கள்.
இந்த அதிகாரிகளுடன் தொழில் நுட்பத்தின் உதவியாலும் பாது காப்புப் பணி நடைபெறும். மேம்படுத்தப்பட்ட ஆளில்லா வானூர்தியும் அனைத்து வகை நிலப்பரப்புகளிலும் செல்லக்கூடிய தானியக்க இயந்திர மனிதனும் பாதுகாப்புப் பணிகளில் சேவை யாற்றும்.
“பாதுகாப்பு திட்டமிடுதலில் உள் கட்டமைப்பு, நிகழ்ச்சியின் பிரம் மாண்டம், திரளாக வரும் கூட்டம் போன்ற பல அம்சங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
“நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களின் உடைமைகள் சோத னைக்கு உட்படுத்தப்படும் என்ப தால் மக்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் நாடுகிறோம்,” என்றார் போலிஸ் உதவி ஆணையாளர் கிரேகரி டான்.