சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) கிங் எட்வர்ட் VII தங்குவிடுதிக்குள் பலமுறை அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த சலவைக்கான துணிகள் அடங்கிய ஒன்பது பைகளைத் திருடிய 19 வயது கோ அன் சூன், அத்துமீறி நுழைதல், மற்றவரின் சொத்துகளை அனுமதியின்றி அபகரித்தல், திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
அந்த இளையர் என்யுஎஸ்சில் வேலை செய்பவரோ படிப்பவரோ இல்லை என்று அறியப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதிக்கும் இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் எட்டு முறை என்யுஎஸ் ஹாலுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் என்று கூறப்பட்டது.