‘காம்பஸ் ஒன்’ கடைத்தொகுதியில் உள்ள கடை ஒன்றில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவத்தின் தொடர்பான விசாரணையில் உதவ போலிசார் படத்தில் உள்ள பெண்ணைத் தேடி வருகின்றனர்.
அந்தத் திருட்டுச் சம்பவம் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெற் றது. இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் போலிசை 1800-2550000 எனும் நேரடித் தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். தெரிவிக்கப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.