பாவாடைக்குள் படம் எடுத்த என்யுஎஸ் மாணவருக்குக் கட்டாய விடுப்பு

பாவாடைக்குள் படம் எடுத்த என்யுஎஸ் மாணவருக்குக் கட்டாய விடுப்பு

1 mins read
ac058814-3d57-4bb0-ab72-3a5b31a2d8ac
படம்: த நியூ பேப்பர் -
Google News Preferred Icon

பல்கலைக்கழக வளாகத்திலும் எம்ஆர்டி நிலையத்திலும் பெண்களின் பாவாடைக்குள் படம் எடுத்த என்யுஎஸ் மாணவர் லுவா சவ் ஸி, 23, செம்டம்பர் மாதம் முதல் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் லுவா அடுத்தாண்டு ஜனவரியில் என்யுஎசின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன் முன்னிலையாக வேண்டும் என்றும் கூறப்பட்டது. பாலியல் தொல்லை கொடுத்ததன் தொடர்பில் லுவா மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தீவின் பல பகுதிகளில் இருக்கும் அறிமுகமில்லாத 31 பெண்களின் பாவாடைக்குள் லுவா படம் எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

அதேபோல் இவ்வாண்டின் முதல் பாதியில் மேலும் நான்கு முறை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்திலும் ஹவ் பார் வில்லா எம்ஆர்டி நிலையத்திலும் பாவாடைக்குள் படம் எடுத்ததாக அறியப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதிக்கு லுவாவின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.