ஜாலான் புக்கிட் மேராவில் மூன்று வாகனங்கள் டாக்சி ஒன்றுடன் மோதிய விபத்தில் டாக்சி ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிறிஸ்மஸுக்கு முன்தினம் இரவு 9.44 மணிக்கு குவீன்ஸ்வேயை நோக்கிச் செல்லும் ஜாலான் புக்கிட் மேராவில் நடந்த இந்த விபத்தில் யாரும் பெரிய அளவில் காயமடையவில்லை என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான படங்கள் ஸ்டோம்ப் இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. வெள்ளி நிற கார், கறுப்புநிற பிஎம்டபிள்யூ கார், கறுப்பு நிற கார், டாக்சி ஆகியவை ஒன்றோடொன்று மோதிக் கொண்ட காட்சிகளையும் மோதலால் கார்களின் உடைந்த சிறு பாகங்கள் சாலையில் சிதறிக் கிடக்கும் காட்சிகளையும் அப்படங்களில் காண முடிந்தது. இந்த விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.