புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி பொதுப்போக்குவரத்துகளான ரயில், பேருந்துச் சேவைகளின் நேரம் நீட்டிக்கப்படுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நேற்று தெரிவித்தது. வடக்கு-கிழக்கு ரயில் சேவை குறைந்தது 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது. ஹார்பர்ஃபிரண்ட் ரயில் நிலையத்தில் இருந்து பொங்கோல் செல்லும் கடைசி ரயில், பின்னிரவு 2.16க்குக் கிளம்பும். அதேபோல் பொங்கோல் ரயில் நிலையத்தில் இருந்து பின்னிரவு 1.45 மணிக்கு கடைசி ரயில் கிளம்பும். பொங்கோல் - செங்காங்குக்கு இடையேயான எல்ஆர்டி ரயில் சேவைகளும் கடைசி வடக்கு கிழக்கு ரயில் சேவை வரை நீட்டிக்கப்படும்.டௌன்டவுன் ரயில் சேவை புக்கிட் பாஞ்சாங் நிலையத்தில் இருந்து கடைசி ரயில் பின்னிரவு 1.48க்கும் எக்ஸ்போ நிலையத்தில் இருந்து கடைசி ரயில் பின்னிரவு 1.49க்கும் கிளம்பும். இதனையடுத்து டிசம்பர் 31ஆம் தேதி 25 பேருந்துச் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவுநேரத்தில் சேவையாற்றும் ஆறு பேருந்துகளின் சேவை அதிகாலை 4 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்காக ரயில், பேருந்து நேரம் நீட்டிப்பு
1 mins read
கோப்புப்படம்: எஸ்டி -

