‘ஐபி’ திட்டப் பள்ளிகளில் சமூக கலப்பு அதிகம் உள்ளது

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத் தில் (ஐபி) உள்ள மாணவர்களின் சமூக கலப்பு, ஐபி அல்லாத கல்வித் திட்டத்தில் உள்ள மாணவர்களின் சமூக கலப்பை விட அதிகம் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி களால் வழங்கப்படும் ஐபி திட்டம் உயர்நிலைக் கல்வி, தொடக்கக் கல்லூரி கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு ஆண்டு கல்வி யைக் கொண்டது. இதில் கல்வியில் மிகச் சிறப்பாக செய்யும் மாண வர்கள் சேர்த்துக்கொள்ளப்படு வார்கள்.

ஐபி திட்டத்தில் உள்ள மாண வர்கள் ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வு எழுதாமல், நேரடியாக ஜிசிஇ மேல் நிலைத் தேர்வு அல்லது அனைத்துலக பாக்கலரே போன்ற இதர தகுதிநிலையை நோக்கிச் செல்வார்கள்.

“ஐபி பள்ளிகளில் உள்ள மாண வர்களின் சமூக கலப்பு மேம் பட்டிருக்கிறதா அல்லது மோச மடைந்துள்ளதா என்று நான் என் னையே முதலில் கேட்டுக்கொண்ட போது, மோசமாக இருக்கலாம் என் பதுதான் எனக்குள் தோன்றிய திடீர் பதில்.

“காரணம் அப்படித்தான் நான் நெடுநாட்களாக நினைத்திருந் தேன். அதிக பிரத்தியேகம், குறை வான பன்முகத்தன்மை,” என்று திரு ஓங் விளக்கினார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பள்ளி முதல்வர் களுக்கான பதவி நியமனம், நன்றி கூறுதல் நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர், பள்ளிகளில் மாணவர் களின் சமூக கலப்பு பற்றி பேசி னார்.

அந்நிகழ்ச்சியில் பள்ளி முதல் வர்களாக நியமிக்கப்பட்டுள்ள 40 பேர் தங்கள் பதவி நியமனக் கடி தங்களைப் பெற்றுக்கொண்டனர்.

“ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு எத் தனை தொடக்கப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வருகிறார் கள் என்பதுதான் மாணவர் கலப்புக் கான குறியீடு.

“அதிகமான தொடக்கப் பள்ளி கள் என்றால் அதிகமான மாண வர்கள். அதிகமான மாணவர்கள் என்றால் அதிகமான மாணவர் சமூக கலப்பு,” என்று அமைச்சர் விளக்கினார்.

ஒரு பள்ளியில் உயர்நிலை ஒன் றில் பயிலும் 100 மாணவர்கள், 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொடக் கப் பள்ளிகளிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று கல்வி அமைச் சின் வழிகாட்டி கூறுகிறது.

2004ஆம் ஆண்டில், ஐபி அல் லாத பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களில் 13 விழுக்காட்டினர் அந்த வழிகாட்டித் தரத்தையும் மிஞ்சிவிட்டது. இந்த ஆண்டில் அந்த விகிதம் 51 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.

ஒப்புநோக்க 2004ஆம் ஆண் டில், உயர்நிலை ஒன்றில் மாண வர்களைச் சேர்த்துக்கொண்ட 17 ஐபி பள்ளிகள் அதாவது 43 % வழி காட்டியை மிஞ்சியது. இந்த ஆண் டில் 88 விழுக்காடு அதாவது 15 ஐபி பள்ளிகள் இலக்கைத் தொட் டன.

“பள்ளிகளில் மாணவரின் சமூக கலப்பை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். இதில் பள்ளித் தலைவர்கள் தார்மீக அடிப்படை யிலான நிலையை எடுக்க வேண் டும்,” என்றும் திரு ஓங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!