சிகரெட் துண்டுகள், அகர்பத்திகள், கரிக்கட்டை போன்றவற்றில் தீயைச் சரியாக அணைக்காமல் விடுவோருக்கு எதிராக ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
60 நிமிடத்துக்குள் மூட்டப்பட்ட அந்தத் தீ சரியாக அணைக்கப் படாமல், தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை வீசுவதும், வைப்பதும், கையில் இருந்து நழுவ விடுவதும் குற்ற மாகும்.
இந்தச் செயல்கள் தீச் சம்பவங் களை ஏற்படுத்துவதால் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட முறையாக தீ அணைக்கப்படாத பொருட்களால் உடனடியாக தீ ஏற்படாது என்ப தால் அதைப் பயன்படுத்துவோர் அதில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள்.
ஆனால், அந்தச் சிறிய தீ பின் னர் பெருந்தீக்கு இட்டுச் செல்லக் கூடும் என்று உள்துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
கடந்த மே மாதம் 6ஆம் தேதி நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள் ளப்பட்ட குற்றவியல் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், ஆபத்தான தீ ஏற்பட்டதற்கு மூலகாரணமானவருக்கு எதிராக சிங்கப்பூர் போலிஸ் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வகை செய்கிறது.
இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி கள் என்று நிரூபிக்கப்படுவோருக்கு எழு ஆண்டுகள் வரை சிறை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சரியாக தீ அணைக்கப்படாத பொருட்களால் தீ மூளும் சம்பவங் களை சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படை கையாளுகிறது என்று உள்துறை அமைச்சு கூறியது.
“2014க்கும் 2018ஆம் ஆண்டுக் கும் இடைப்பட்ட காலத்தில் ஆண் டுக்கு சராசரியாக 550 புதர்த் தீ சம்பவங்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கையாண்டு உள்ளது. அவற்றில் பெரும்பாலா னவை சரியாக தீ அணைக்கப்படாத சிகரெட் துண்டுகளால் ஏற் பட்டவை.
“மற்ற நாடுகளில் நாம் பார்த்திருப்பதைப் போல, இது போன்ற புதர்த் தீ சம்பவங்கள் தடுக்கப்படவில்லை என்றாலும்
கட்டுப்படுத்தப்படவில்லை என் றாலும் உயிர்களுக்கும் சொத்து களுக்கும் அதிக சேதத்தை ஏற் படுத்தக் கூடியவையாக இருக் கும்,” என்றும் உள்துறை அமைச்சு விளக்கியது.