சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத் துக்கு முன்கூட்டியே கிறஸ்மஸ் பரிசு கிடைத்தது. அங்கு இம்மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை வெள்ளை நிறக் காண்டா மிருகத்துக்கு ஒரு பெண் குட்டி பிறந்தது.
இன்னும் பெயரிடப்படாத அந்தக் குட்டி சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பிறந்திருக்கும் காண்டா மிருகக்குட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது தாயாரான 34 வயது டோன்சாவுக்குப் பிறந்திருக் கும் 12வது குட்டி.
டோன்சாவும் குட்டியின் தந்தை யான ஹோப்பலும் முறையே 1992ஆம் ஆண்டிலும் 2000ஆம் ஆண்டிலும் தென் ஆப்பிரிக்கா விலிருந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தன.
“புதிதாகப் பிறந்துள்ள குட்டி எழுந்து நடக்கிறது. நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது,” என்று சிங்கப்பூர் வன விலங்கு காப்பகம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத் தில் தெரிவித்தது.
டோன்சாவையும் அதன் குட்டி யையும் பொதுமக்கள் இப்போ தைக்குப் பார்க்க முடியாது. ஆனால் ஹோப்பலையும் இதர காண்டா மிருகங்களையும் பிற்பகல் 1.15 மணிக்கு அவற்றுக்குத் தீனி போடும் நேரத்தின்போது பார்க்க லாம்.
வெள்ளை நிற காண்டா மிரு கங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் வனவிலங்கு காப்ப கத்தின் பார்வையாளர் ஈர்ப்பு விலங்குகளாக உள்ளன. 1996ஆம் ஆண்டு முதல் இந்த விலங்கு களை சிங்கப்பூர் விலங்கியல் தோட்டமே இனப்பெருக்கம் செய்ய தொடங்கியது.
அன்று முதல் 17 காண்டா மிரு கங்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, இந்தோனீசியா, கொரியா, தாய் வாந்து ஆகிய நாடுகளின் காண்டா மிருக இனப் பெருக்கத் திட்டங் களில் ஈடுபடுத்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.