சிங்கப்பூரில் நேற்று முன்தினம் அரிய சூரிய கிரகண நிகழ்வை அனைவரும் ஆவலுடன் பார்த்தி ருந்த சமயத்தில் தரையில் முழு அளவிலான சூரிய வடிவம் தென் படவில்லை. மாறாக, பிறை வடிவி லான சூரிய பிம்பங்கள் தென் பட்டதை பொதுமக்களில் சிலர் படம்பிடித்து, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
சந்திரன் சூரியனை மறைக்கும் இந்த வானியல் நிகழ்வு சுமார் 1.30 மணிக்கு நிகழ்ந்தது. அந்தச் சம யத்தில் தரையில் பிறை வடிவிலான நிழல் பிம்பங்கள் பிரதிபலித்தன. இது பற்றி ‘நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஊசிமுனை கேமராக்களில் தோன்றும் பிம்பங்கள் போன்றது இந்த சூரிய பிம்பங்கள் என்று அந் நிறுவனத்தின் இணையத் தளத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஊசிமுனை கேமரா என்பது ‘லென்ஸ்’ எனப்படும் கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தாமல் கேமராவின் பக்கவாட்டில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக படம் எடுப்பது.
அந்தத் துவாரத்தின் வழியாகச் செல்லும் ஒளி, தலைகீழான பிம் பத்தை ஏற்படுத்தும். இதுபோல்தான், நேற்று முன் தினம் மரத்தில் இலை களுக்கு நடுவே ஊடுருவிய சூரிய ஒளி தரையில் விழும்போது தலை கீழான பிம்பத்தை ஏற்படுத்தியது.
“வழக்கமாக மரத்தில் இலை களுக்கு நடுவில் ஊடுருவும் சூரிய ஒளி தரையில் வட்டமான பிம்பத்தை உருவாக்கும். ஆனால், சூரிய கிர கண சமயத்தில் அது தலைகீழான பிம்பத்தை உருவாக்கி உள்ளது.
“இது பகுதி சூரிய கிரகணத் தின்போதும் நிகழும்,” என்று விளக் கினார் சிங்கப்பூர் வானியல் சங்கத் தின் தலைவர் திரு ஆல்பர்ட் ஹோ.
அடுத்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக அது அடுத்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி நிக ழும் என்றும் சிங்கப்பூர் அறிவியல் நிலையம் கூறியுள்ளது.
அடுத்த முழு அளவிலான சூரிய கிரகணம் 2063ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நிகழும் என் றும் அறிவியல் நிலையம் தெரி வித்தது.