சாங்கி விமான நிலைய ஜுவல் பொழுதுபோக் குத் தளத்தில் உள்ள ‘இட்டாச்சோ’ ஜப்பானிய உணவகத்தில் (படம்) உண வைக் கையாளு வதற்கு அங்கீ காரம் இல்லாத ஊழியர் ஒருவர் பணியாற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால், அங்கு விற்கப்பட்ட உணவை உட்கொண்டதால் தமது மனைவிக்கு குடல் அழற்சி ஏற்பட்டதாக திரு மார்க் வோங் என்பவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் கொடுத்திருந்ததன் தொடர்பில் சோதனை நடத்தியதில் அங்குள்ள உணவில் ‘சால்மொனெல்லா’ நச்சுக்கிருமி இல்லை என்பதையும் சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியது.
இம்மாதம் 13ஆம் தேதி அந்த உணவகத்தில் உணவுண்ட மாது ஒருவர் குடல் அழற்சி கோளாறு ஏற்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இதன் தொடர்பில் சிங்கப்பூர் உணவு அமைப்பின் அதிகாரிகள் இம்மாதம் 18ஆம் தேதியன்று சோதனை நடத்தினர்.
‘சால்மொனெல்லா’ நச்சுக் கிருமி உடலுக்குள் சென்ற வுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைஃபாய்ட் காய்ச்சல் ஆகியவை ஏற்படும்.
உணவைக் கையாளுவதற்கு அங்கீகாரம் இல்லாத ஊழியர் ஒருவரைப் பணியில் அமர்த்தியதன் தொடர்பில் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு அமைப்பு கூறியது.
உணவு உண்ட அடுத்த நாள் ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக தமது மனைவி மவுண்ட் அல்வேனியா மருத் துவமனையில் இம்மாதம் 15ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் என்றும் அதன் தொடர்பில் ‘இட்டாச்சோ’ உணவகத்தைத் தொடர்புகொண்டுள்ளதாகவும் திரு வோங் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். தமது மனைவி இம்மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தாலும் உடல் இன்னும் நலிவுற்ற நிலையில்தான் இருக்கிறார் என் ும் கூறினார்.
திரு வோங்கின் மனைவி உணவு உட்கொண்ட அதே நேரத்தில் அங்கு மேலும் 436 பேர் உணவருந்தியதாகவும் அவர்கள் எவருக்கும் எந்த உடல் உபாதையும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் அந்த உணவகம் லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழிடம் விவரித்தது. பத்து ஆண்டு களாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் இட்டாச்சோ உணவகம் ‘ஏ’ நிலை உணவுத் தர நிலையை தான் கட்டிக்காத்து வருவதாகவும் சொன்னது.