பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதிக்கு குவியும் பாராட்டுகள்

கோவை: தனது ஏழு வயது அப்பாவி மகளைப் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த குற்ற வாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை வரவேற்பதாகக் கூறியுள்ளார் சிறுமியின் தாய் வனிதா.

இருப்பினும் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்ற வாளியையும் கண்டுபிடித்து அவ னுக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தி உள்ளார்.

“தூக்குத் தண்டனையை நாங்கள் ஏற்பதில்லை. அதேசமயம் இதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை கடுமையாகத்தான் வழங்கவேண்டும். எனவே இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்,” என்று மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “கோவையைச் சேர்ந்த சந்தோஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி ராதிகாவுக்கு எனது பாராட்டுகள். இனி வருங் காலத்தில் இதுபோன்ற செயல் களைச் செய்ய அஞ்சி, வெட்கப் படக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது,” என்று கூறியுள்ளார்.

திமுக மகளிர் அணி செயலர் கனிமொழி கூறுகையில், “6 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என உறுதியாகி உள்ளது. ஆனால், பிரேதப் பரிசோதனையில் மேலும் ஒரு நபரின் டிஎன்ஏ இருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது போலிஸ் துறை நடவடிக்கை எடுக் காமல் இருப்பது சந்தேகம் தரு கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 26ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் சடலத் தைப் போலிசார் மீட்டனர். மார்ச் 31ல் துணை தாசில்தாரிடம் சந்தோஷ்குமார் சரணடைந்தார்.

கோவை மாவட்டம், தொண்டா முத்துார் அருகே உலியம்பாளை யத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 34. குடும்பப் பிரச்சினையால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

துடியலுார் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள தன் பாட்டி அய்யம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சந்தோஷ்குமார், சிறு மியை பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.

சிறுமி கொலை செய்யப்பட்டு, ஒன்பது மாதங்களுக்குள் நேற்று முன்தினம் மாலை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா, சாட்சி விசாரணை களின் அடிப்படையில் சந்தோஷ்

குமார் குற்றவாளி என அறிவித்து தீர்ப்பை வாசித்தார்.

குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் பலாத்கார குற்றத்துக்கு ஆயுள் சிறை, 1,000 ரூபாய் அபராதம்; கொலை குற்றத்துக்கு துாக்குத் தண்டனை; தடயங்களை மறைத்த குற்றத்துக்கு ஏழாண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனையை சாகும்வரை சிறையில் அனுபவிக்க வும் உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!