பொதுச் சேவை வாகன உரிமம் இல்லாமல், சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே பயணிகளைத் திரட்டி சேவை வழங்கி, அதன் மூலம் அவர்களுக்கு சலுகை அளிக்கும் செயலில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு எதிரான கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.
அவ்வாறு குற்றம் புரிபவர்களுக்கு எதிராக சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் அது கூறியது.
‘சேம்ரைட்’ எனும் செயலி தொடங்கப்பட்டிருப்பது குறித்து ஆணையத்திடம் கேட்கப்பட்டதற்கு, “சட்டத்துக்குப் புறம்பாக பயணிகளை ஏற்றிச் சென்று அவர்களுக்கு சலுகை அளிக்கும் வெளிநாட்டு வாகனங்களின் இந்தச் செயலை தான் கடுமையாக நோக்குவதாக அது சொல்லிற்று.
‘சேம்ரைட்’ செயலி, ஜோகூருக் கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணிகளைத் திரட்டி, அவர்களை இரு நாடுகளிலும் இறக்கி விடு கிறது.
‘சேம்ரைட்’ செயலி நேற்று முன் தினம் வெளியிட்ட தனது அறிக் கையில், தனது பயணி திரட்டு சேவை நாளை 30ஆம் தேதி முழு மையாக செயல்படத் தொடங்கும் என்றும் சிங்கப்பூரிலிருந்து ஜோகூ ருக்குச் செல்ல விரும்புவோரும் ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வர விரும்புவோரும் சில மணி நேரத்துக்கு முன்னதாகவோ சில நாட்களுக்கு முன்னதாகவோ தங் கள் விருப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித் திருந்தது.
“இந்தச் சேவையைப் பயன் படுத்த நீண்டகால கடப்பாடு தேவையில்லை. இந்தச் செயலியைப் பயன்படுத்துவதால் தங்கள் பயணத்துக்கு ஏற்படும் செலவைக் குறைத்துக்கொள்ளலாம். மேலும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கும் விரைவில் செல்லலாம்,” என்றும் சேம்ரைட் தெரிவித்தது.
கடந்த இரண்டு வார காலத்தில் கிட்டத்தட்ட 300 பயணிகள் சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான பயணங்களுக்கு தங்கள் விவரங்களைப் பதிந்து கொண்டுள்ளனர் என்றும் சேம் ரைட் தனது அறிக்கையில் குறிப் பிட்டிருந்தது.
பொதுச் சேவை வாகன உரிமம் இல்லாமல், சிங்கப்பூருக்கும்
ஜோகூருக்கும் இடையே பயணி களைத் திரட்டி சேவை வழங்கி, அதன் மூலம் அவர்களுக்கு சலுகை அளிப்பதற்கு வெளிநாட்டில் பதிவுசெய்த வாகனங் களுக்கு அனுமதி இல்லை என்று நிலப் போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியது.
“இவ்வாறு செய்யும் வாகன ஓட்டுநர்களுக்கு $3,000 வரை அபராதம், ஆறு மாதம் வரையிலான சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம் என்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் ஆணையம் கூறியது.
உரிமம் இல்லாத வாகனங்கள் வழங்கும் இத்தகைய சேவைக்கு பயணிகளைப் பாதுகாக்கும் மூன் றாம் தரப்புக் காப்புறுதித் திட்டம் இல்லாமல் போகலாம். ஆகவே இந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.