எண் 8, தாகூர் டிரைவ் எனும் முகவரியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் நேற்று முன்தினம் பின்னிரவு தீ மூண்டது.
அந்தத் தீயைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது 16 அவசரகால வாக னங்களையும் 50 தீயணைப்பு வீரர் களையும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தது.
தீச் சம்பவம் குறித்து தங்க ளுக்கு நேற்று முன்தினம் பின்னிரவு 12.20 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
“சுவாசக் கருவிகளுடனும் தீய ணைப்புச் சாதனங்களுடனும் தீய ணைப்பு வீரர்கள் கட்டத்துக்குள் தீ மூண்ட இடத்தைக் கண்டறியவும் யாராவது அங்கு சிக்கியுள்ளார்களா என்பதைக் கண்ட றியவும் மெல்ல மெல்ல கவனமாகச் சென்றனர்.
“கட்டடத்துக்குள் பெரும் புகை சூழ்ந்திருந்ததால், தெளிவாகப் பார்ப்பதற்கு முடியவில்லை என்று கூறிய குடிமைத் தற்காப்புப் படை, நீரைப் பீய்ச்சியடிக்கும் மூன்று சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒருவழியாக நேற்றுக் காலை 8.15 மணிக்கு தீ அணைக்கப் பட்டது,” என்றும் விவரித்தது.
“20 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்ட நான்கு மாடி சேமிப்புப் பகுதியும் அலுவலகமும் கொண்ட இடத்தில் தீ மூண்டிருக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது.
“வீட்டுச் சாதனங்கள், மின்ன ணுவியல் பொருட்கள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பல்வேறு அளவுகளில் உள்ள அட்டைப் பெட்டிகள் தரையில் இருந்து கூரை வரை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன,” என்றும் குடிமைத் தற்காப்புப் படை விளக்கம் அளித்தது.
அந்தக் கட்டடத்தில் இருந்த 13 பேர் சிங்கப்பூர் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே சுயமாகக் கட்டடத்தை விட்டு வெளியேறினர் என்றும் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் தீ மூளாமல் இருப்ப தற்கு பொருட்கள் மீது நீரைத் தெளிக்கும் செயல் தீயணைப்புப் பணிக்குப் பிறகு மேற்கொள்ளப் பட்டது.
தீச் சம்பவத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.