மேலும் ஐந்து உணவங்காடி நிலையங் களில் உணவு உண்போருக்கு கழுவி வைக்கும் தட்டுகளில்தான் இனி உணவு பரிமாறப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
உணவருந்திவிட்டு வீசி எறியும் தட்டுகளை (படம்) வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போக்கை படிப்படியாக உணவங்காடி நிலையங்கள் கைவிட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 12 உணவங்காடி நிலையங்கள் உணவைப் பொட்டலமிட்டு வாங்கிச் செல்வோருக்கு மட்டும்தான் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் பொட்டலங்களை வழங்குகிறது.
இந்தப் புதிய பழக்கத்தில் சேர்ந்துகொண்டுள்ள அந்த ஐந்து உணவங்காடி நிலையங்கள் மார்சிலிங் மால் கடைத் தொகுதி, புளோக் 163 புக்கிட் மேரா சென்ட்ரல், புளோக் 628 அங் மோ கியோ அவென்யூ 4. புளோக் 84 மரின் பரேட் சென்ட்ரல், புளோக் 16 பிடோக் சவுத் ரோடு ஆகிய இடங் களில் உள்ளன.
மனிதவள தேவை அதிகரிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த உணவங்காடி நிலையங்கள் பொதுவான தட்டுகளையும் ஒருங்கிணைந்த தட்டு கழுவும் சேவையை யும் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
இதற்கு முன் இத்திட்டத்தில் சேர்ந்துகொண்ட புதிதாகக் கட்டப்பட்ட புக்கிட் பாஞ்சாங், சி யுவான், ஜூரோங் வெஸ்ட், கம்போங் அட்மிரல்டி, அவர் தெம்பனிஸ் ஹப், பாசிர் ரிஸ் சென்ட்ரல், ஈசூன் பூங்கா ஆகிய உணவங்காடி நிலை யங்கள் பயன்படுத்திவிட்டு வீசி எறியும் தட்டுகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதில்லை.
கழிவுகளற்ற சிங்கப்பூரை நோக்கி எனும் இயக்கத்தை ஒட்டி, இந்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் கழிவுகளைக் குறைக்கும் விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த இயக்கத்தின் இலக்கு.