73 நண்பர்களை ஏமாற்றி $800,000 அபகரிப்பு

தனது 73 நண்பர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து $800,000க்கு மேற்பட்ட தொகையை அபகரித்த மாது ஒருவர் மீது போலிஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

குமாரி அலெக்சாண்ட்ரா லோ எனும் முன்னாள் நிதி ஆய்வாளர், வீட்டுக்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்பதுபோல் பல்வேறு காரணங்களைக் கூறி தனது நண் பர்கள் 73 பேரை ஏமாற்றியதாக போலிஸ் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குமாரி லோவுக்கு எதிராக பத்துக்கு மேற்பட்ட புகார்கள் போலிசில் தாக்கல் செய்யப்பட்டி ருப்பதாக அறியப்படுகிறது.

வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலையிழந்த தனது உறவினரின் கடனை அடைப்பதற் காக பணம் தேவைப்படுகிறது, மருத்துவமனையில் உள்ள தனது தாயாரின் மருத்துவச் செலவுக ளுக்குப் பணம் தேவைப்படுகிறது என்று சரமாரியாக குமாரி லோ பொய்களைக் கூறியிருக்கிறார்.

ஆனால், போலிஸ் விசாரணை யில் குமாரி லோ, மார்பக விரி வாக்க சிகிச்சைகளுக்காக தன் நண்பர்களிடம் $800,000 முதல் $900,000 வரை கடன் வாங்கி இருப்பதாகக் கூறியுள்ளார்.

நண்பர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது குமாரி லோவின் தில்லுமுல்லு வெளிச்சத் துக்கு வந்தன.

பல்வேறு பொய்களைக் கூறி ஏமாற்றிய குமாரி லோவைச் சந் தித்து போலிசில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அவரது நண் பர்கள் அவரை போலிஸ் நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர்.

நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் குமாரி லோ கிட்டத்தட்ட $6,500 பெற்றார். ஆகக் கூடுதலாக அவர் ஒரு நண்பரிடம் $121,500 பெற்றி ருக்கிறார் என்று போலிஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரி லோவின் முன்னாள் பள்ளி சகாவும் நெருங்கிய நண்ப ருமான ஒருவர் குமாரி லோ தன் னிடம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத் தில் $20,000 கடன் வாங்கினார் என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் கூறினார்.

இதற்கு குமாரி லோ, தனது வீட்டுக்கான முன்பணத்தைச் செலுத்த உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது. ஆனால், தந்தை வைத்திருந்த பணத்தை அவரது நண்பருக்குக் கடன் கொடுத்து விட்டதால் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிய வில்லை என்று பொய்யுரைத்தி ருந்தார் என்று அந்த நபர் விவ ரித்தார்.

மற்றொரு நண்பரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தின் (என்டியு) முன்னாள் கல்லூரி சகாவுமான 27 வயது திரு டான், குமாரி லோவை நம்பி அவருக்கு $1,000 கடன் கொடுத்ததாகக் கூறி னார்.

“அவர் வேலையில்லாத ஒரு சூதாட்டப் பித்தர் அல்ல. அவர் என்டியுவின் தலைசிறந்த மாண வர்களில் ஒருவர்,” என்று கூறும் திரு டான், “அவருக்கு எதிராக வழக்கு தொடுத்து பணத்தை மீட் கும் எண்ணமில்லை. காரணம், அதற்கான வழக்குக் கட்டணம் நான் கொடுத்த $1,000ஐ விட அதிகமாக இருக்கும்,” என்றார்.

தனக்கு எதிரான போலிஸ் விசாரணை பற்றி தெரியவந்ததும் தனது முதலாளி தன்னை வேலை நீக்கம் செய்துவிட்டதாகவும் குமாரி லோ தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!