கடன் அட்டை வைத்திருப்போரில் பலர் அண்மைய காலத்தில் தங்களின் கட்டணங்களைக் காலக்கெடுவுக்குள் கட்டி வருவதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடன் அட்டையைப் பயன்படுத்தி அதிகத் தொகையைக் கடன் வாங்கியோரின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 75,500ஆக இருந்தது. இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 40% குறைந்து, 44,700 ஆனது. கடன் வாங்கியிருந்தவர்களின் செலுத்தாத கடன் தொகை 2015ல் $6.7 பில்லியனாக இருந்தது. அது இவ்வாண்டு $4.2 பில்லியன் ஆனதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்தது. ஆணையம் கடன் வாங்குவதற்கென ஒரு வரம்பை விதித்ததிலிருந்து நிலைமை மேம்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.