செங்காங்கிலும் தெம்பனிஸ் வட்டாரத்திலும் கட்டப்பட இருக்கும் இரண்டு எக்சகியூட்டிவ் கொண்டோமினியங்களைக் கட்டித் தருவது தொடர்பான சொத்து மேம்பாபட்டாளர்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தேர்வு செய்ய இருக்கிறது.
இதுதொடர்பான ஏலக்குத்தகைக்குக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டு எக்சகியூட்டிவ் கொண்டோமினியங்களிலும் 1,100 வீடுகள் கட்டப்படக்கூடும் என்று கழகம் கூறியது.
எக்சகியூட்டிவ் கொண்டோமினியம் கட்ட ஃபேர்ன்வெல் லேனில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் 17,129.9 சதுர மீட்டர் நிலப்பரப்பு கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 480 அடுக்குமாடி வீடுகள் கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெம்பனிஸ் வட்டாரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் இதைவிட பெரியது. அது 23,799.2 சதுர மீட்டர் நிலப்பரப்பு கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 595 அடுக்குமாடி வீடுகள் கட்டலாம்.
மொத்த வருமானமாக மாதத்துக்கு $16,000க்குள் ஈட்டும் சிங்கப்பூர் குடும்பங்கள் எக்ஸ்கியூட் டிவ் கொண்டோமினியத்தில் வீடு வாங்கலாம்.