சொந்த உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தது உட்பட போலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்தியதாலும் நேற்று 34 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிளோக் 15, ‘மெரின் டெரஸ்’ பகுதியில் நடந்த இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு நேற்று மதியம் 2.37 மணிக்கு தகவல் கிடைத்தது.
சம்பவம் குறித்த காணொளி ஒன்றில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை அதிகாரிகள் கட்டடத்திற்கு கீழ் உயிரைக் காப்பாற்றும் சாதனம் ஒன்றை அமைப்பது தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பெண் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் விசாரணைத் தொடர்ந்து நடக்கிறது என்றும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.