‘யுடியூப்’ நட்சத்திரமான ஸ்டீவன் லிம்முடன் சண்டையிட்டு திரு பிரதீப் சுப்பிரமணியன் இறந்த சம்பவம் 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூரை உருக்குலைய வைத்தது.
அவ்வாண்டு 23 செப்டம்பரில் நடந்த சம்பவத்தில் மூத்த உடற்கட்டழகு வீரர் திரு பிரதீப்பிற்கு ஏற்கனவே இதயம் சார்ந்த இரண்டு மருத்துவப் பிரச்சினைகள் இருந்ததாக நீதிமன்றம் இன்று (30 டிசம்பர்) தெரிவித்துள்ளது.
மாரடைப்பு, சுவாச செயலிழப்பு காரணங்களால் திரு பிரதீப் இறந்ததாக உடற்கூறு ஆய்வு (autopsy) மூலம் அறியப்படுகிறது.
வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க தேசிய விளையாட்டு மன்றம் புது நடத்தை விதிகளை வகுத்து வருகிறது.
இந்த விதிகள், தனிப்பட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் உட்பட சிங்கப்பூரின் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.